வட்டார வழக்குக்காக பழங்கால கிராமத்தை தேடிய படக்குழு

வட்டார வழக்குக்காக பழங்கால கிராமத்தை தேடிய படக்குழு

Published on

மதுரா டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘வட்டார வழக்கு’. ‘டூலெட்’ சந்தோஷ் ஸ்ரீராம், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். டோனி ஜான், சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறியதாவது:

இது பங்காளிகளுக்குள் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட படம். 1985-ல் நடப்பது போல உருவாக்கியுள்ளோம். 40 வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்த கலப்படமில்லாத காதல், பகை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத மனிதர்களைப் பற்றிய கதையை ரத்தமும் சதையுமாகச் சொல்லி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சி 1960-களில் நடப்பது போல வரும். அதற்காக, பழமையான கிராமத்தைத் தேடி கஷ்டப்பட்டோம். மின் கம்பிகள், தார் சாலை, கான்கிரீட் வீடுகள் இல்லாத கிராமத்தை இப்போது காண்பது கடினம். கடைசியில் கல்லுப்பட்டியில் எதிர்பார்த்த இடம் கிடைத்தது. அங்கு படமாக்கினோம். ஷூட்டிங் முடிந்துவிட்டது. இவ்வாறு கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in