10 நாட்களில் ரூ.33 கோடியை வசூலித்த சமந்தாவின் ‘யசோதா’

10 நாட்களில் ரூ.33 கோடியை வசூலித்த சமந்தாவின் ‘யசோதா’
Updated on
1 min read

நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘யசோதா’ படம் 10 நாட்களில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’. பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப்பெற்று வரும் ‘யசோதா’ வாடகைத்தாய் குறித்து பேசுகிறது. இந்தப் படத்திற்காக நடிகை சமந்தா ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளருடன் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி வைரலானது.

ரூ.40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல்நாள் ரூ.6.32 கோடி வரை வசூலித்தததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. படம் வெளியாகி 3 நாட்களில் படம் ரூ.20 கோடி வரை உலகம் முழுக்க வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.33 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in