‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் காமெடியை எதிர்பார்க்காதீங்க: சந்தானம்

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் காமெடியை எதிர்பார்க்காதீங்க: சந்தானம்
Updated on
1 min read

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், புகழ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. மனோஜ் பீத்தா இயக்கியுள்ளார். தெலுங்கில் வெளியான ‘ஏஜென்ட் சாய் னிவாச ஆத்ரேயா’ படத்தின் ரீமேக் இது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி சந்தானம் கூறியதாவது:

"என் படத்தில் ரசிகர்கள் காமெடியைஎதிர்பார்க்கிறார்கள். இதில் காமெடிபண்ணவில்லை. அதை இதில் எதிர்பார்க்காதீர்கள். இயக்குநர் ‘இதில், நீங்க காமெடி பண்ண வேண்டாம்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார். இந்தக்கதைக்கு அது தேவையில்லைஎன்றும் கூறி விட்டார். ஆனால், இது நல்ல படமாக இருக்கும்.

ஒரு தமாசான ஏஜென்ட், பயங்கரமான விஷயத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. இயக்குநர் மனோஜின் பட உருவாக்கம் புதுமையாக இருந்தது. பான் இந்தியா விஷயம் வந்தபிறகு, எல்லா படமும் தமிழில் டப் ஆகிவிடுகிறது. உடனே ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதனால், இப்போது ரீமேக் படம் எடுப்பது கடினம். இந்தப் படத்தைத் தெலுங்கில் பார்த்திருந்தாலும் புதிய படம் போலவே இருக்கும்" இவ்வாறு சந்தானம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in