அப்பாஸுக்கு அறுவை சிகிச்சை

நடிகர் அப்பாஸ்
நடிகர் அப்பாஸ்
Updated on
1 min read

தமிழில் 1996-ம் ஆண்டு, கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். 90-களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸ், தொடர்ந்து,‘விஐபி’, ‘பூச்சூடவா’, ‘படையப்பா’, ‘மலபார்போலீஸ்’, ‘திருட்டுப் பயலே’ உள்பட பலபடங்களில் நடித்தார்.

தெலுங்கு, கன்னடபடங்களிலும் நடித்துள்ளார். கடந்தசில வருடங்களுக்கு முன் மனைவி எராம் அலி, மகள் எமிரா, மகன் அய்மான் ஆகியோருடன் நியூசிலாந்தில் செட்டிலானார். அங்கு சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். வலது காலில் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in