Published : 20 Nov 2022 04:12 PM
Last Updated : 20 Nov 2022 04:12 PM

இரண்டு நாட்களில் ரூ.36 கோடி வசூலித்த இந்தி த்ரிஷ்யம் 2

இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘த்ரிஷ்யம்2’ படம் இரண்டு நாட்களில் ரூ.36.97 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் ‘த்ரிஷ்யம் 2’ படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் பதாக். வியாகாம் 18 நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு, அக்‌ஷய் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 18-ம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாள் ரூ.15.38 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாம் நாள் ரூ. 21.59 கோடியை வசூலித்து இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.36.97 கோடியை படம் வசூலித்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x