பீரியட் படமாக  உருவாகும் யோகிபாபுவின் ‘தூக்குத்துரை’

பீரியட் படமாக  உருவாகும் யோகிபாபுவின் ‘தூக்குத்துரை’
Updated on
1 min read

யோகிபாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘தூக்குத்துரை’ எனப் பெயரிப்பட்டுள்ளது.

‘காஃபி வித் காதல்’ படத்திற்கு பிறகு நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் டென்னிஸ் மஞ்சுநாத். ‘ட்ரிப்’ படத்தை இயக்கியுள்ள அவர் தற்போது இயக்கும் புதிய படம் ‘தூக்குத்துரை’. யோகிபாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இனியா நாயகியாக நடிக்கிறார்.

’தூக்குதுரை’ திரைப்படம் 'PRE' (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் இசையமைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in