Published : 17 Nov 2022 09:47 PM
Last Updated : 17 Nov 2022 09:47 PM

“நேர்த்தியான படைப்பு” - ‘கலகத் தலைவன்’ படம் பார்த்து உதயநிதியை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கலகத் தலைவன்” படத்தை பார்த்து ரசித்துள்ளார் அவரின் தந்தையும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படம் நாளை வெளியாகிறது. இதில் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உட்பட பலர்நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி, பிரியன்பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார்.

படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x