

'ஓ காதல் கண்மணி' படத்துக்காக உருவாக்கப்பட்ட மெட்டை அப்படியே 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் கன்னியாகுமரி கடற்கரை பின்னணியில் வரும் 'அவளும் நானும்' பாடல் அப்படத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல.
கெளதம் மேனன் அப்பாடல் இடம்பெறும் காட்சியை விளக்கியவுடன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் "பாரதிதாசன் வரிகளை வைத்து நானே ஒரு மெட்டை உருவாக்கியிருக்கிறேன். கேட்டுப் பாருங்கள்" என்று கூறியிருக்கிறார். இறுதி செய்யப்படாத பாடல் என்றாலும், அருமையாக இருக்கிறது இதனை அப்படியே உபயோகப்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.
அப்பாடல் 'ஓ காதல் கண்மணி' படத்தில் 'ஏ சினாமிகா' பாடலுக்கு முன்பு இப்பாடலைத் தான் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதனை வைத்து காட்சிப்படுத்தியும் இருக்கிறார் மணிரத்னம். ஆனால், படமாக பார்க்கும் போது அந்த இடத்தில் அப்பாடல் பொருந்தவில்லை என்று 'ஏ சினாமிகா' பாடலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில், கெளதம் மேனன் மெட்டில் சிறுசிறு மாற்றங்கள் செய்து 'அவளும் நானும்' பாடலை இறுதி செய்திருக்கிறார்.