‘நாடு’ படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனை

‘நாடு’ படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனை
Updated on
1 min read

ஸ்ரீஆர்க் மீடியா சார்பில் சக்ரா, ராஜ் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கியுள்ளார். தர்ஷன் நாயகனாகவும் மகிமா நம்பியார் நாயகியாகவும் நடித்துள்ளனர். சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் சரவணன் கூறியதாவது: இது, எளிய மனிதர்கள் பற்றிய கதை. மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு அங்கு சென்ற போது, நான் கண்ட நிகழ்வு ஒன்று என் மனதைப் பாதித்தது. அதை மையப்படுத்தி இதன் கதையை உருவாக்கினேன்.

இதில் ஹீரோவாக நடித்த தர்ஷனை ஆடிஷன் வருவதற்கு முன்புவரை, நான் பார்த்ததில்லை. நேரில் பார்த்ததும் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியானவர் என்று தோன்றிவிட்டது. படத்திற்கான ஒர்க் ஷாப்பில் இருந்து இந்தக் கதையுடன் அவர் பயணிக்கத் தொடங்கிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in