

சசிகுமார் தயாரித்து நடிக்கும் 'பலே வெள்ளையத் தேவா' படத்தை டிசம்பர் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'கிடாரி' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் துவங்கப்பட்டது.
இப்படத்தில் தயாரிப்பாளர் சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரவி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார். செப்டம்பர் 21-ம் தேதி முதல் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.
பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு ' ''பலே'' வெள்ளையத் தேவா' என பெயரிட்டது படக்குழு. மேலும், ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் திட்டமிட்டப்பட்ட முடித்தது படக்குழு.
இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தை டிசம்பர் 23-ல் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வசுந்தராதேவி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.