“சூரியனுக்கு அருகில் இருப்பது போல்...” - ரஜினியின் பாராட்டை சிலாகித்த பிரதீப் ரங்கநாதன்

“சூரியனுக்கு அருகில் இருப்பது போல்...” - ரஜினியின் பாராட்டை சிலாகித்த பிரதீப் ரங்கநாதன்
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் ‘லவ் டூடே’ படம் பார்த்துவிட்டு அதன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர், தானே நடித்தும் இயக்கியுள்ள படம் ‘லவ் டுடே’. கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் இவானா, யோகிபாபு, ரவீனா ரவி, ராதிகா சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையைமத்திருந்த இப்படம் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வசூல் ரீதியாகவும் முன்னேறி வரும் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு அதன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் பாராட்டு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்து பதிவிட்டுள்ள இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “இதைவிட அதிகமாக வேற என்ன கேட்டுவிட முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் அவ்வளவு இதமாக இருந்தது. இறுக்கமான அணைப்பு , அந்த கண்கள், சிரிப்பு , நடை மற்றும் அன்பு. என்ன ஒரு ஆளுமை அவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் #LoveToday பார்த்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நீங்க சொன்ன வார்த்தைகளை மறக்க முடியாது சார்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in