ஆடை சர்ச்சையில் நடிகர் சதீஷ்: தர்ஷா குப்தா சாடல்

ஆடை சர்ச்சையில் நடிகர் சதீஷ்: தர்ஷா குப்தா சாடல்

Published on

தமிழில் 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன் . இதில்,புகழ், தர்ஷா குப்தா, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இயக்கி உள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் நடந்தது. விழாவுக்கு சன்னி லியோன் பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தார். நடிகர் சதீஷ் மேடையில் பேசும்போது, மும்பையில் இருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்துள்ளார். கோவையில் இருந்து வந்த தர்ஷா, எப்படி வந்திருக்கிறார் பாருங்கள்” என்று கூறியிருந்தார். மாடர்ன் உடை அணிந்து வந்திருந்த தர்ஷா குப்தா இதனால் நெளிந்தார். சதீஷ், ஆடை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குநர் ‘மூடர் கூடம்’ நவீன், நடிகை சின்மயி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த சதீஷ், “தர்ஷா குப்தா என் தோழி, சன்னி லியோன் கவர்ச்சி உடையில் வருவார் என நினைத்து, நான் கவர்ச்சி உடையில் வந்தேன். ஆனால் அவர் பட்டுப்புடவை அணிந்து வந்ததால் அப்செட் ஆகி விட்டேன் என என்னிடம் சொன்னார். இதை மேடையில சொல்லுங்க என்றும் அவர் சொன்னார். அதனால் பேசினேன்." என்றார்.

இதற்கு தர்ஷா குப்தா தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "சதீஷ், இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகிறார். யாராவது என்னைப் பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்க என்று சொல்லுவார்களா? சதீஷ் இப்படி சொல்வது சரியானது அல்ல” என்று கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in