

மதுரை முனிச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவரது வீடு மதுரை அருகில் உள்ள விரகனூரில் உள்ளது. அங்கு இவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், வடிவேலு தனது 2-வது மகள் கார்த்திகாவுக்கு திருமண ஏற்பாடு செய்தார். கார்த்திகாவுக்கும், உறவினரான கணேஷ்குமாருக்கும் அண்மை யில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதன்படி இவர்கள் திருமணம் நேற்று காலை விரகனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் வடிவேலு குடும்பத்தினர், உறவினர்கள், நாடக நடிகர்கள் மட்டும் பங்கேற்றனர். திரைப்பட நடிகர் பூச்சி முருகன் தவிர, திரையுலகினர் வேறு யாரும் திருமண விழாவில் பங்கேற்கவில்லை. மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த எல்சிடி டி.வி-களில் வடிவேலு நடித்த பல்வேறு படங்களின் நகைச்சுவை காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு தனது மகனுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அந்த திருமணத்தையும் ஆடம் பரம் இன்றி எளிமையாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.