

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் ‘வா வாத்தி’ முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி உள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் மெலடி ரகமாக வெளிவந்துள்ளது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக அவர் நடித்துள்ளார். சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கவனிக்கிறது.
இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். அண்மையில் தனுஷின் நடிப்பில் நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தன. பாடல் வரிகள் வீடியோ..