பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டு: படக்குழு கொண்டாட்டம்

பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டு: படக்குழு கொண்டாட்டம்
Updated on
1 min read

வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான படம் ‘பொல்லாதவன்’. இதில் தனுஷ், ரம்யா, டேனியல் பாலாஜி, கிஷோர் உட்பட பலர் நடித்திருந்தனர். பைவ்ஸ்டார் கதிரேசன் தயாரித்த இப்படம் கடந்த 2007 நவ.8-ம் தேதி வெளியானது. இது வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை தனுஷ், வெற்றிமாறன், ரம்யா, தயாரிப்பாளர் கதிரேசன் உட்பட படக் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.

மேலும் திவ்யா தனது பதிவில், "பொல்லாதவன் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது. இந்த நேரத்தில் எனது நீண்டகால நண்பர் தனுஷை சந்தித்த நன்றி. அவர் என்னை படத்தில் நடிக்க பரிந்துரைத்தார். பொல்லாதவன் 2க்காக காத்திருக்கிறோம்" என்று நெகிழ்வாக குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in