Published : 10 Nov 2022 08:31 AM
Last Updated : 10 Nov 2022 08:31 AM

நடிகை ஆனார் பாடகி ராஜலட்சுமி

‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன மச்சான்’, ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘சாமி என் சாமி’ உட்பட பல பாடல்களை பாடியிருப்பவர் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி செந்தில். இவர் ‘சைலன்ஸ்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

தந்தை - மகள் பாசப் பின்னணியோடு பெண்களின் பாதுகாப்பு பற்றி விவாதிக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி கணபதி பாலமுருகன் இயக்குகிறார். இவர் கவுண்டமணி நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தை இயக்கியவர். நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். ராதாரவி, விஜய் பாரத், மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x