

குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம், ‘பரோல்’. ராஜ்குமார் அமல் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர். மதுசூதனன் தயாரித்துள்ளார். துவாரக் ராஜா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 11 ம் தேதி வெளியாகிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழாவில் துவாரக் ராஜா பேசும்போது, “இந்தப் படம் ஒரு குடும்பத்தைப் பற்றியது. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தைப் பற்றி ஆக்ஷனோடு சொல்லி இருக்கிறோம். ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்று கதை செல்லும்” என்றார்.