

‘நாளை’, ‘சக்கரவியூகம்’ படங்களை இயக்கிய உதயபானு மகேஷ்வரன் என்ற உதய் மகேஷ், நடித்தும் வருகிறார். ‘தி பேமிலிமேன் 2’ வெப் தொடரில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
கவிதாலயா புரொடக்ஷனும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் இணைந்து தயாரிக்கிறது. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஹேசம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.