

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அவர் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள ‘லவ் டுடே’ படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், அதே நிறுவனத்துக்கு பிரதீப் ரங்கநாதன் மீண்டும் படம் இயக்குகிறார். அதில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ஏஜிஎஸ் நிறுவன தரப்பில் விசாரித்தபோது, “பிரதீப் இயக்குவது உறுதியாகி இருக்கிறது. அதில் ஜெயம் ரவி நடிப்பாரா? பிரதீப்பே நாயகனாக நடித்து இயக்குவாரா என்பது முடிவாகவில்லை” என்று கூறப்பட்டது.