தலைமுறை இடைவெளியை சொல்லும் சிக்லெட்ஸ்

 நயன் கரிஷ்மா
 நயன் கரிஷ்மா
Updated on
1 min read

‘திறந்திடு சிசே' படத்தை இயக்கிய எம்.முத்து இயக்கியுள்ள படம் 'சிக்லெட்ஸ்'. தெலுங்கு நடிகர் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா, ஸ்ரீமன், மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். எஸ்.எஸ்.பி. பிலிம்ஸ் சார்பில் ஏ. ஸ்ரீனிவாசன் குரு, தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறார்.

படம்பற்றி இயக்குநர் முத்து கூறும்போது, '' 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி திரைக்கதை உருவாகி இருக்கிறது” என்றார். இதன் முதல் தோற்றத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in