

கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பாலமுரளி கிருஷ்ணா கர்னாடக சங்கீதத்தில் ஒரு பீஷமர் என்று சொல்லலாம் அகில இந்திய அளவில் உயரிய மத்திய அரசு விருதுகளை வாங்கியுள்ளார். அப்படிபட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி ஏ.பி.நாகராஜன் வேண்டுக்கோள் ஏற்று 'திருவிளையாடல்' படத்தில் டி.எஸ் பாலையாவுக்கு "ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா" என்ற பாடலை பாடினார்.
அந்த படம் வெற்றி படமாக ஓடியதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் தான் காரணமாக அமைந்தது. ஏன் என்றால் மாறுபட்ட குரல் மேலும் டி.எஸ்.பாலையாவின் நடிப்பு. அதற்கு பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் இளையராஜா இசையில் 'கவிக்குயில்' படத்தில் எனக்காக அவர் பாடினார். சிக்மளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும், கிருஷ்ணர் ,ராதா வேடத்தில் நடித்தோம் அந்த பாடல் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்கிற பாடல்.
அந்த பாடல் தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காக பாடினார். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.