நயன்தாரா பட ஷூட்டிங் நிறைவு

நயன்தாரா பட ஷூட்டிங் நிறைவு
Updated on
1 min read

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்துள்ள படம், ‘இறைவன்’. அஹமது இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.8 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. வரியுடன் சேர்த்து ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாவும் பேசப்பட்டது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடந்து வந்தது. இப்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள ‘கோல்ட்’ படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து அவர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ என்ற இந்தி படத்தில் அவர் நடித்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in