

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து, 2019-ல் வெளியான படம், ‘கைதி’. ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவான இந்த ஆக்ஷன் படம் தமிழ், தெலுங்கில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இது, அஜய்தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறது. இதில், தபு நடித்து வரும் நிலையில், அமலா பாலும் இணைந்துள்ளார். அவர் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.