

விஷ்ணு விஷால் நடிக்கும் 'கட்டா குஸ்தி' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாவனர் நடிகர் விஷ்ணு விஷால். ‘இன்று நேற்று நாளை’ முண்டாசுப்பட்டி, ‘ராட்சசன்’, ‘எப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அடுத்து 'கட்டா குஸ்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். விஷ்ணு விஷாலும், தெலுங்கு பிரபல நடிகர் ரவிதேஜாவும் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் படத்தின் கிளிம்ஸ் விஷ்ணு விஷாலின், பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு இருந்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, செல்லா அய்யாவு இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரவி தேஜா நடித்துள்ளார். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. சிவப்பு நிற உடையுடன் குஸ்தி போட்டிக்கு களமிறங்குவது போன்ற தோற்றத்துடன் இருக்கும் இந்த முதல் பார்வை கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக வெளியான க்ளிம்ஸ் வீடியோ பார்வைக்கு: