காதலரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா - விரைவில் ஜெய்பூரில் திருமணம்

காதலரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா - விரைவில் ஜெய்பூரில் திருமணம்
Updated on
1 min read

நடிகை ஹன்சிகா தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ அண்மையில் வெளியானது.

ஹன்சிகா தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஜெய்பூரில் டிசம்பர் 4-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமண நிகழ்விற்கு நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதை ஹன்சிகா உறுதிபடுத்தியுள்ளார்.

ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். காதலருடன் பாரீஸ் நகரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது காதலர் அவருக்கு ப்ரொப்போஸ் செய்வது போலவும், அதற்கு கேப்ஷனாக 'இப்போதும்... எப்போதும்' எனப் பதிவிட்டுள்ளார். ஹன்சிகாவின் இந்தப் புகைப்படத்திற்கு நடிகைகள் குஷ்பு, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா ரெட்டி உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in