

“சர்தார்“ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்தி, தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் தண்ணீர் மாஃபியா, உளவாளியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார். 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.