

‘ஜெய் பீம்’ மணிகண்டன், நாயகனாக நடித்துள்ள படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இதில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பாக யுவராஜ் கணேசன், எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம்பற்றி இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் கூறும்போது, “இது ரொமான்டிக் காமெடி படம். குறட்டை பிரச்னையையும் மையமாக வைத்தி ருக்கிறோம். ஆனால், அது உருவக்கேலி போன்று இருக்காது. படம் யதார்த்தமாக இருக்கும். ஒவ்வொருவரும் கதையோடு தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார்.