பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்திற்காக இணைந்து பாடிய அனிருத் - விஜய்சேதுபதி

பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்திற்காக இணைந்து பாடிய அனிருத் - விஜய்சேதுபதி
Updated on
1 min read

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்திற்காக அனிருத் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.

பாலிவுட்டில் ஆயுஷ்ரான் குரானா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அந்தாதூன்’. தமிழில் இந்தத் திரைப்படம் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிகர் பிரஷாந்த் நடிக்க சிம்ரன், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பிரசாந்த்தின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் தயாரித்து இயக்கி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை அனிருத் மற்றும் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க பிரபுதேவா இசைந்துள்ளார். படம் முழுவதும் முடிந்த நிலையில், இறுதிகட்ட காட்சிக்காக இந்தப் பாடலை இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

பிரசாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்தப் பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் காட்சி படமான உடனே ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி தாணு உலகமெங்கும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in