

லைகா தயாரிப்பில், தனது தந்தை ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார், ஐஸ்வர்யா ரஜினி. இந்தப் படத்துக்கு முதலில் இளம் ஹீரோ ஒருவரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர், ரஜினி தரப்பில் இருந்து சிவகார்த்திகேயனிடம் பேசலாம் என்று கூறப்பட்டதாம். இதையடுத்து லைகா நிறுவனம் நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் 20 நிமிடம் மட்டுமே வருகிறார் என்று கூறப்படுகிறது. ரஜினி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் விருப்பப்பட்டாலும் கால்ஷீட் இல்லாததால், அவர் அமைதியாக நடிக்க இயலாத நிலையை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் படத்தில் அதர்வா இப்போது ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.