

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளனர். ரா.கார்த்திக் இயக்கி இருக்கிறார். வரும் 4ம்தேதி வெளியாகிறது.
படம் பற்றி ரா.கார்த்திக் கூறும்போது, இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மனதில் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நேர் நிலையான தாக்கம் ஏற்படும் என நம்புகிறேன். படம் பார்க்கும் முன் மனதில் அழுத்தங்கள் இருந்தாலும், நெருக்கடிகள் இருந்தாலும், அவற்றை கடந்து இந்த படம் மன நிம்மதியையும், புன் சிரிப்பையும் உண்டாக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன். குடும்பத்துடன் பார்க்கும்படி இந்தப் படம் இருக்கும்” என்றார்.