இந்த வாரம் அணிவகுக்கும் காதல் படங்கள் - திரையரங்கு ரிலீஸ் பட்டியல்

இந்த வாரம் அணிவகுக்கும் காதல் படங்கள் - திரையரங்கு ரிலீஸ் பட்டியல்
Updated on
1 min read

தீபாவளி சிறப்புத் திரைப்படங்கள் வெளியானதை அடுத்து கடந்த வாரம் பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில், இந்த வாரம் காதல் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்', கார்த்தியின் 'சர்தார்' படங்கள் கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின. இதையடுத்து கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாக சூழலில், இந்த வாரம் காதல் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

காஃபி வித் காதல்: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு 'அரண்மனை 3' படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'பென்ஸ் மீடியா நிறுவனங்கள்' இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மூன்று நாயகர்கள், மூன்று நாயகிகள் நடிக்கும் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 4 (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லவ் டுடே: 'கோமாளி' படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நடித்துள்ள படம் 'லவ் டுடே'. சத்யராஜ், யோகி பாபு, இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா, ஃபனலி பரத், ஆதித்யா கதிர், அஜீத் காலிக், விஜய் வரதராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நித்தம் ஒரு வானம்: இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் 'நித்தன் ஒரு வானம்'. இப்படத்தில் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in