

இயக்குநர் அட்லீ தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் 'ஜவான்' படத்திற்குப் பிறகு அடுத்த படத்தில் சல்மான்கானை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் படம் 'ஜவான்'. இதில் தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். படம் வரும் 2023 ஜூன் மாதம் திரையில் வெளியாகும் என கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லீ, சல்மான் கானுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியிருக்கிறாராம். அட்லீயின் படங்களும் சல்மானுக்கு பிடித்து போகவே அவருடன் பணியாற்ற சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் அட்லீ ஐக்கியமாகியுள்ளதாகத் தெரிகிறது.