ரூ.3.5 கோடியில் ‘லண்டன் சிறை’ செட்டில் ‘அச்சம் என்பது இல்லையே’ படப்பிடிப்பு: படக்குழு தகவல்

ரூ.3.5 கோடியில் ‘லண்டன் சிறை’ செட்டில் ‘அச்சம் என்பது இல்லையே’ படப்பிடிப்பு: படக்குழு தகவல்
Updated on
1 min read

அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்திற்கு ரூ.3.5 கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு லண்டன் சிறை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்திருக்கிறார். இருவரும் இணையும் படத்திற்கு 'அச்சம் என்பது இல்லையே' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது.

இது குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்: லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.3.5 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார். பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் துன்புறுத்துகிற இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in