‘எளியோரை வலியோர் வாட்டினால்...’ - சசிகுமாரின் ‘நான் மிருகமாய் மாற’ ட்ரெய்லர் எப்படி?

‘எளியோரை வலியோர் வாட்டினால்...’ - சசிகுமாரின் ‘நான் மிருகமாய் மாற’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'நான் மிருகமாய் மாற' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 'கழுகு', 'கழுகு 2' படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் 'நான் மிருகமாய் மாற'. தொடக்கத்தில் 'காமன் மேன்' என தலைப்பிடப்பட்டிருந்த இப்படம் காப்புரிமை காரணமாக பெயர் மாற்றப்பட்டது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விக்ராந்த், ஹரிப்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - கருப்பு வெள்ளை - கலர் கலந்த ஒரு நிறத்தில் மொத்த ட்ரெய்லரும் வெளியிடபட்டுள்ளது. ஒரு நீண்ட வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் ரத்தம் தெறிக்கிறது. குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒரு சாதாரண மனிதனின் போராட்டம்தான் படத்தின் அடிநாதம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. '100 கோடி மனிதனுக்கு ஆயிரம் கோடி ஆசை', 'எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை எளியோர் வாட்டும், இத சொன்னவன் கையில கெடச்சான்' என நீளும் வசனங்கள் கவனம் பெறுகின்றன. காதல், காமெடி என எந்தவித ஜாலியான தருணங்களுக்கும் இடம் கொடுக்காமல், கொள்ளை, கொலை, ரத்தம், பழி தீர்த்தல் என பாயும் இந்த ட்ரெய்லரில் விக்ராந்த் கவனம் ஈர்க்கிறார். படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in