சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
Updated on
1 min read

சீனுராமசாமி இயக்கியுள்ள 'இடம் பொருள் ஏவல்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'இடம் பொருள் ஏவல்'. கடந்த 2014-ம் ஆண்டே வெளியீட்டுக்கு தயரான இப்படம் பொருளாதார பிரச்னையால் நீதிமன்றத்தில் முடங்கியது.

இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் எப்போது வெளியாகும் என்ற தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in