இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன் - நயன்தாரா
Updated on
1 min read

தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் சேர்ந்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தீபாவளி வாழ்த்து சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த அக்டோபர் 8-ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்'' என பதிவிட்டிருந்தார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவர, இது தொடர்பான விவாதங்கள் மேலெழுந்தன. வாடகைத்தாய்க்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஆளுக்கொரு குழந்தையை கைகளில் ஏந்திய வண்ணம் தீபாவளி வாழ்த்துகளை கூறியுள்ளனர். நயன் - விக்கி ரசிகர்கள் இதனை சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in