த்ரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ பட போஸ்டர் வெளியீடு

த்ரிஷா நடிக்கும் ‘தி ரோட்’ பட போஸ்டர் வெளியீடு

Published on

நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படமான 'தி ரோட்' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது. இதையடுத்து த்ரிஷா அடுத்ததாக நடிக்கும் படம் 'தி ரோட்'. மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சார்பட்டா பரம்ரையில் நடித்த சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in