ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார்
Updated on
1 min read

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 வாக்கில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கலை இயக்குனர் சந்தானம் காலமானார். அவருக்கு வயது 50 என தெரிகிறது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவின் தரமான படைப்புகளில் ஒன்றாக போற்றப்பட்டு வருகிறது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் தான் சந்தானம். இவர் நடிகர் விஜயின் சர்கார் மற்றும் ரஜினிகாந்தின் தர்பார் போன்ற படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றிவயர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். சமகால மற்றும் மன்னர் கால வாழ்வியலை ஆயிரத்தின் ஒருவன் படத்தில் தனது கலை இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கண்முன் கொண்டு வந்தவர் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in