‘பீஸ்ட்’ முதல் ‘விக்ரம்’ வரை - தீபாவளிக்கு டிவி சேனலில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?
தீபாவளியை முன்னிட்டு சாட்டிலைட் சேனல்களில் சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்தும், அதன் நேரம் குறித்தும் பார்ப்போம்.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்', கார்த்தியின் 'சர்தார்' படங்கள் வெளியாகியுள்ளன. அதை தவிர்த்து, வீட்டியிலிருந்தே தீபாவளியை கொண்டாட நினைப்பவர்களுக்கு சாட்டிலைட் சேனல்கள் சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளன. அதன் பட்டியல்:
சன் டிவி: சன் டிவியில் 24-ம் தேதி காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டாக்டர்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. பிற்பகல் 2 மணிக்கு ரஜினி நடித்த 'அருணாச்சலம்' திரைப்படமும், மாலை 6.30 மணிக்கு விஜய்யின் 'பீஸ்ட்' படமும் ஒளிபரப்பாக உள்ளது.
கலைஞர் டிவி: கலைஞரில் 24-ம் தேதி 1.30 மணிக்கு சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவி: கமல் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் விஜய் டிவியில் மலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சிம்பு நடித்த 'மாநாடு' படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
ஜீ தமிழ்: காலை 11 மணிக்கு ஆர்யாவின் 'கேப்டன்' திரைப்படமும், பிற்பகல் 1 மணிக்கு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படம் தமிழிலும், மாலை 5 மணிக்கு 'கேஜிஎஃப் 2' திரைப்படமும் ஒளிபரப்பட உள்ளது.
கலர்ஸ் தமிழ்: அருள் நிதி நடித்துள்ள 'தேஜாவு' திரைப்படம் மாலை 4 மணிக்கும், விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' திரைப்படம் 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
இதைதவிர்த்து ஓடிடியில் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்த லிங்கை க்ளிக் செய்து புதிய பட விவரங்களை அறிந்து கொள்ளலாம். தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் - ஒரு விரைவுப் பார்வை
