

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கப்படுகிறது. தேவராக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தை ‘ஊமை விழிகள்’ அரவிந்த்ராஜ் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “இது சாதி பற்றிய படமல்ல. முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையே ஒரு சினிமா போலதான் இருந்திருக்கிறது. அதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக எடுத்திருக்கிறோம். அவருடைய அரசியல் வாழ்க்கையை மட்டுமே பேசியிருக்கிறோம்.
ஒரு சித்தர் போலவே அவர் வாழ்ந்தார். அவர் சந்தித்த 8 தேர்தல்கள் பற்றி படம் பேசும். அவர் யார் என்று இன்றைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக படத்தை எடுத்திருக்கிறோம். படம் வெளியானதும் அனைவருமே பாராட்டுவார்கள்” என்றார்.