

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, இப்போது நடிப்பில் பிசியாக இருக்கிறார். கடைசியாக, 2015-ம் ஆண்டு வெளியான ‘இசை’ படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்போது, மார்க் ஆண்டனி, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படம் உட்பட சில படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்குகிறார். ‘கில்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தைத் தயாரித்து இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், இந்தியில் இந்தப் படம் உருவாகிறது.
படத்தில் கார் ஒன்று கதாபாத்திரம் போலவே வருகிறது. இதற்காக ஸ்பெஷல் காரை ஜெர்மனியில் இருந்து எஸ்.ஜே.சூர்யா இறக்குமதி செய்துள்ளார். ஒரு வருடத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த கார், இப்போது சென்னை வந்துள்ளது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் முடிவாகவில்லை. படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்க இருக்கிறது.