

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவிருக்கும் 'சைத்தான்', நவம்பர் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சைத்தான்'. பிரதீப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் தமிழக உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றி இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இறுதிகட்ட பணிகள் தாமதத்தால், தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்தவுடன், நவம்பர் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.