

அதி நவீன இசைக்கூடம் கட்டுவதற்கு இசையமைப்பாளர் இமான் திட்டமிட்டு இருக்கிறார்.
விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். அதனைத் தொடர்ந்து 'மைனா', 'கும்கி', 'ஜில்லா', 'ரோமியோ ஜூலியட்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், இன்னும் தெலுங்கு படங்களுக்கு மட்டும் இசையமைக்கவில்லை. அடுத்தாண்டு இசையமைக்க திட்டமிட்டு இருக்கிறார்.
விருகம்பாக்கத்தில் இவருடைய பாடல் ஒலிப்பதிவு கூடம் இருக்கிறது. தற்போது, அதற்கு அருகிலேயே புதிதாக இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். அங்கு அதி நவீன இசைக்கூடம் ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்திருக்கிறார் இமான். விரைவில் இதற்கான பணிகளைத் துவங்க இருக்கிறார்.
முன்னதாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் புதிதாக அதிநவீன இசைக்கூடம் ஒன்றை உருவாக்கி முடித்திருக்கிறது நினைவுகூரத்தக்கது.