இயக்குநர் விக்ரமன் மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் விக்ரமன் மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இயக்குநர் விக்ரமனின் மகன் கனிஷ்கா நடிக்கும் 'ஹிட்லிஸ்ட்' படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆர்கே செல்லுலாய்டு என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஜான் மேற்கொள்கிறார். நேற்று விஜய் கனிஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விஜய் கனிஷ்கா சித்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. காமெடி, ஆக்சன், கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in