கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி

’அப்படியெல்லாம் நான் யோசித்தது கூட இல்லை’ - தேர்தலில் போட்டியிடுவது குறித்து கிருத்திகா உதயநிதி 

Published on

''சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தெல்லாம் நான் யோசித்தது கூட கிடையாது' என கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று நடந்த இந்நிகழ்வில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிருத்திகா உதயநிதி, ''18 ஆதரவற்ற இல்லங்களுடன் இணைந்து நாங்கள் இந்த தீபாவளியை கொண்டாடுகிறோம். 25 ஆண்டுகளாக இதை நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார். அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? எனக் கேட்டதற்கு, 'அப்படியெல்லாம் நான் யோசித்தது கூட கிடையாது'' எனப் பதிலளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in