இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின் - ‘டெவில்’ படப்பிடிப்பு நிறைவு

இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின் - ‘டெவில்’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகவும் 'டெவில்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இயக்குநராக மட்டுமின்றி, பல்வேறு பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். இந்நிலையில், தற்போது 'டெவில்' என்ற புதிய படம் மூலமாக மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஆதித்யா எழுதி இயக்கும் இப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்து அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in