தென்கொரிய திரைப்படவிழாவில் விருது வென்ற சாட் பூட் த்ரி 

தென்கொரிய திரைப்படவிழாவில் விருது வென்ற சாட் பூட் த்ரி 
Updated on
1 min read

தென்கொரிய திரைப்பட விழாவில் "சாட் பூட் த்ரி" தமிழ் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்த திரைப்படம் "சாட் பூட் த்ரி". இந்தப்படம் தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப்பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) பெற்றுள்ளது.

2016-இம் ஆண்டு முதல் நடக்கும் இந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் விருதுபெரும் முதல் இந்திய திரைப்படம் "சாட் பூட் த்ரி" என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் அருணாச்சலம், '' நாடு, மொழி உள்ளிட்ட காரணிகள் கடந்து கொரியாவில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு "அன்பிற்கோர் பஞ்சமில்லை" என்ற தன் படத்தின் மூலக்கருவை உள்ளபடியே இயல்பில் உணர்த்தியது தமக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in