விரைவில் தொடங்கும் பா.ரஞ்சித் - விக்ரம் படத்தின் படப்பிடிப்பு

விரைவில் தொடங்கும் பா.ரஞ்சித் - விக்ரம் படத்தின் படப்பிடிப்பு
Updated on
1 min read

பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

'பொன்னியின் செல்வன்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு நடிகர் விக்ரம் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் இந்தப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையக்க உள்ளார். 'சீயான்61' என அழைக்கப்படும் இப்படம் 1800 காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும், படம் 3டியில் வெளியாகும் எனவும் பா.ரஞ்சித் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும், கேஜிஎஃப் குறித்த கதை என அவர் கூறியிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் இன்று தொடங்கிய நிலையில், படக்குழு இன்னும் ஓரிரு நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in