தளபதி பிரபு - உதயநிதியின் பொதுவாக எம்மனசு தங்கம் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தளபதி பிரபு - உதயநிதியின் பொதுவாக எம்மனசு தங்கம் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

புதுமுக இயக்குநர் தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு இருக்கிறார்கள்.

எழில் இயக்கத்தில் உருவாகி வரும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் பணிகள் முடிவடைந்தைத் தொடர்ந்து 'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் கெளரவ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இன்று (நவம்பர் 27) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன். இவர்களோடு சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், பாடலாசிரியராக யுகபாரதி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

தேனி படப்பிடிப்பைத் தொடர்ந்து மதுரை, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 2017ம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in