விஜய் ஆண்டனியின் ரத்தம் ஷூட்டிங் நிறைவு

விஜய் ஆண்டனியின் ரத்தம் ஷூட்டிங் நிறைவு
Updated on
1 min read

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் படம், ‘ரத்தம்’. இதில், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அதிஷா வசனம் எழுதும் இந்தப் படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசையமைக்கிறார். இதன் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்றும் விரைவில் படம் வெளியாகும் என்றும் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in